நாடோடி சரா...

நான் ஒரு நாடோடி... நான் கண்ட நல்லது, கெட்டதுகளை எழுதலாம்னு இந்த blog அரம்பித்து இருக்கேன். எழுதுவேன்... எழுதுவேன்... நிறைய எழுதுவேன்.... இதுவே என் தாரக மந்திரம்.... நேசத்தின் சுவாசத்தில், சரா...

பிரஞ்சு கவிஞன் "காக்கலி மருதிய்" கவிதைகள் -தமிழில்.

வானம் நீலம்,
வெறுமை காற்று
நினைவு நீ

பாசவெளியில்
பால்மனம் மாறா
சோளக்கதிரில் வண்டுபோல்
உன் நினைவு

நீண்ட பயணத்தில்
நிஷ்கலங்க நிலா
நிதர்சனமான
நிழலுடன்

நிர்வாண நீரோடையில்
நிற்கின்றேன் நான்

புதிய உவமானங்கள்

காதலியே!

நீ எனக்கு கவிதை போல
எனக்கு தவிர யாருக்கும் புரியாதவள்

காதலியே!

நீ எனக்கு பஸ்சில் வரும் வாந்தி போல...

எடுத்தால் பக்கத்து சீட்டுகாரன் திட்டுவான்
எடுக்காவிட்டால் எனக்கு ஆபத்து.

காதலியே!

நீ எனக்கு பஞ்சரான பைக் போல

தள்ளி கொண்டும் போக முடியாது.
விட்டு விட்டும் போக முடியாது.

காதலியே!

நீ எனக்கு கண் வலி (மெட்ராஸ் ஐ) போல

என்னத்தான் கருப்பு கண்ணாடி போட்டு
ஊருக்கு மறைத்தாலும்
வலி இருக்கத்தானே செய்யும் எனக்கு

காதலியே!
நீ எனக்கு கவிதை போல

எனக்கு தவிர யாருக்கும் புரியாதவள்

கவிதை சுனாமியார் கவிதைகள்

கண்டதை உண்டு
நான் ஆனேன் குண்டு

தலையில் இருப்பது சிண்டு.
உள்ளே ஒண்ணும் இல்லையா? நீ மண்டு

"two" ன்னா தமிழ்ல ரெண்டு
cancer ன்னா நண்டு.

பூவெல்லாம் சேந்தா செண்டு.
அல்வாவை நீயும் கிண்டு

பூவுல பாரு வண்டு
செடிக்கு முக்கியம் தண்டு

அரிசி மாவு கொண்டு
அதிரசம் திங்கும் வாண்டு

படுக்கத்தானே திண்டு
தலை துவட்டத்தானே துண்டு

என்னதேவை வேண்டு
இதுவே என் தமிழ் தொண்டு

கவிஞர் தமிழ் சுனாமி
நாடோடி சரா..