நாடோடி சரா...

நான் ஒரு நாடோடி... நான் கண்ட நல்லது, கெட்டதுகளை எழுதலாம்னு இந்த blog அரம்பித்து இருக்கேன். எழுதுவேன்... எழுதுவேன்... நிறைய எழுதுவேன்.... இதுவே என் தாரக மந்திரம்.... நேசத்தின் சுவாசத்தில், சரா...

நன்மை கடை பிடி


'வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்க்கு
உள்ளத் தனைய உயர்வு"
நாடும் வீடும் நலம் பெற...
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்
சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள்
நாடோடி சரா

கடவுள் வேண்டாம்

அல்லாஹு அக்பர்,
ஆண்டவர் இயேசு,
இமயத்தில் இருக்கும்,
ஈசன்....

உலகெல்லாம் காக்க வந்தனரன்றி
ஊரை கொளுத்தவோ?

எம்மதமும் சம்மதம் என்று
ஏடுகளில் இருந்தால் போதுமோ

ஐயகோ...
ஒன்றும் அறியா மழலைகளை கூட
ஓர் நொடியில் கொன்றிடும்
இந்த கொடிய தீவிரவாத்திற்கு
இழவு வாராதோ....

மதங்களின் பெயரால்மானுடம் அழிவது
மண்ணில் இன்னும் எத்துணை நாளோ!

அல்லா வேண்டாம்,
இயேசு வேண்டாம்,
ஈசனும் வேண்டாம்

எங்களுக்கு மனிதம் போதும்!
எங்களுக்கு மனிதம் போதும்!!

கடவுள் வேண்டாம்

"நாடோடி" சரா...சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்.

கதை:. காதல் எதிர்ப்பு சவால் கொலை கல்யாணம்.

நடிகர்கள்:திரிஷா.ரவி மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள்

இயக்கம்: ரீமேக் ராஜா

தயாரிப்பு: குடும்ப தயாரிப்பு.

படம் இந்தி படத்தின் சாயலில் முதல் பாதியும்,விக்கிரமன் சாயலில் இரண்டாவது பாதியும் உள்ளது.கல்யாண காட்சிகள் கல கலப்பானவை... ஆனாலும் சௌக்கார் பேட்டை பீடா நெடி தெரிகிறது.

எல்லோரும் கும்பல், கும்பலாக வந்து போகிறார்கள்.

பாடல்கள் நன்றாக வந்துள்ளது. குறிப்பாக த்ரிசா, அவரது தோழி ஆடும் பாடல் கவிதை நயம்.

பிரபு, சிவாஜி கணேசன் சாயலை அவ்வப்பொழுது தூவி விடுகிறார்.

கலாபவன் மணி, இந்த மாதிரியே நடித்தால், பொன்னம்பலம்,தளபதி தினேஷ் போன்றவர்களின் இடத்துக்கு வந்து விடுவார்.

பாக்ய ராஜ். இந்தியில் அனுபம் கேர் செய்யகூடிய கதாபாத்திரத்தை செய்யலாம். இவருக்காக சில வசனங்கள் சேர்க்க பட்டது போல் தெரிகிறது.

லொள்ளுசபா, ஆங்காங்கே வந்து கலகலபூட்டுகிறார்.இந்த பாணி ரொம்பநாள் தாங்காது.

த்ரிசா... தெலுங்கில் இருந்து தமிழுக்கு ஒன்ஸ்மோர் செய்து இருக்கிறார்.

ரவி NRI கதாபாத்திரம் நன்றாக பொருந்துகிறது.

கடைசியில் அந்த கொலை தேவை இல்லையோ????

படம்... நல்ல பொழுது போக்கு சித்திரம் (படம் கண்டிப்பாக வெற்றிபடம் ஆகி விடும்)

நாடோடி சரா

அய்யா எனக்கொரு உண்மை தெரிஞ்சாவணும்...

இந்த கேள்விகளுக்கு பதில் தெரியலையே....
1. நான் பிறக்குறதுக்கு முன்னாடிலேர்ந்து இருக்குற தெருவுக்கு பேரு - புதுத்தெரு

2. நான் போற அன்றைக்கு மட்டும், ஏன் ரயில்ல இவ்வளவு கூட்டம்.

3. நான் போற பேருந்து நிற்கிற இடத்துல மட்டும் என்னா ஒரு நாத்தமுங்க.

4. படத்துல கதாநாயகன் பத்துபேர கொன்னு போட்டலும், அவன் சாகுறப்ப மட்டும் எதுக்கு சோகமான இசை போடுறாங்க.

5.மைக்கு முன்னாடி மட்டும் எதுக்கு எல்லோரும் நல்லவங்க மாதிரியே பேசுறாங்க.

6.கோயில்ல சிறப்பு தரிசனம் செய்றவங்களுக்கு சாமி சிறப்பு அருளா செய்யும்.

7.மலையாளிகளுக்கு "நீங்க,வாங்க"ன்னு யாரையும் சொல்லதெரியாதா?

8."படிச்சவன்"னா பேண்டு சட்டைதான் போடனுமா?

9.இந்திய அரசியல்வாதிகளுக்கு வெள்ளை உடைதான் எப்ப சட்டம் போட்டாங்க.

10.அரசியல்வாதி கார்ல போறப்போ, எதுக்கு முன்னாடியும் பின்னாடியும் கார் போது.

11.சென்னைக்கு போறப்ப, ராத்திரி பேருந்து போய் நிற்கிற கடை முதலாளிக்கு மனசாட்சியே கிடையாதா?

உள்ளம் கேட்குமே மோர்...

உள்ளம் கேட்குமே மோர்...

பெப்சி - கோக் தேவையா....

தேவை:காரணங்கள்
1.வயிற்றில் புழு பூச்சி அண்டாமல் இருக்க


2.சிறந்த முறையில் கக்கூஸ் கழுவ

3.நாங்களும் உலக தரத்திற்க்கு குடிக்கிறோம் என்பதை காட்ட.

4.60 காசு பொருள் 10 ரூபாய்க்கு விற்க்கும் முறையை கற்க.

5.க்ரிக்கட் (criket) மாட்ச் நடத்த

6.இலவச பிரிட்ஜ் கடைகளுக்கு தர (இலவச tv குடுத்தால் ஆட்சியே கிடைக்கும் நாடு இது)

7.வெளிநாடு போல கலர்,கலரா விளம்பர போர்டு வச்சு நகரத்தை அழகு படுத்த.

8.அரசியல்வாதிகளுக்கு அதிக கமிசன் கிடைக்க

9.விளம்பரம் மூலம் ஏழை நடிகர், நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பிழைப்பு நடத்த.

10.tv சேனல்கள் பிழைக்க...

பெப்சி கோக் விற்பனையை அதிக படுத்த சில ஐடியாக்கள்

1.அதிகமாக குடிக்கும் நபர்களுக்கு - அந்தகால "சர்" பட்டம் போல "பெப்சி கொண்டான்" என்று பட்டம் கொடுக்கலாம்

2.ரேசன் கடையில் அரசு செலவில் இலவச பெப்சி - கோக் கொடுக்கலாம்

3.அதில் கொஞ்சூண்டு போதை மாத்திரை கலந்து டாஸ்மாக்கில் விற்க்கலாம் ( வாட்டர் பாக்கெட். பேப்பர் கப் செலவு மிச்சம்).

4.விளையாட்டு வீரர்கள் சட்டை,பனியன்களில் விளம்பரபடுத்துவதை விட, உடம்பு முழுக்க பச்சை குத்தி நிர்வாணமாக நடக்கவிடலாம்.

5.ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல பெப்சி-கோக் பெயர்களை 1008 தடவை எழுதினால்,திருப்பதியில் எக்ஸ்ட்ரா லட்டு இலவசமாக கொடுக்கலாம்

6.இட்லி சாம்பார்க்கு பதிலாக, இட்லி பெப்சியை நடிகர் நடிகைகள் விட்டு விளம்பரபடுத்தலாம்.(ஹீரோ போடும் ஜட்டியையே தேடி பிடித்து வாங்கி போடும் நம்ம ஊருல ஈசியா விளம்பரம் ஆகும்.)

7.பெப்சி ரசம்,கோக் பிரியாணி, கோக் பிரைடு ரைஸ் போன்ற ஐட்டங்களை லோக்கல் கடைகளில் விற்க சொல்லி ஹோட்டல்களுக்கு ஊக்கதொகை தரலாம்.

8.பெப்சி-கோக் குடிக்க மாட்டேன் என்று சொல்லும் வீணாபோனவர்கள் மீது தண்ணிலாரி ஏற்றி கொன்றுவிட்டு. பெப்சி-கோக் குடிக்காத்தால் சாமிகுத்தம் வந்து செத்ததாக பிரச்சாரம் செய்யலாம்.

9.பிள்ளையார் பால் குடித்ததை போல், பெருமாள் பெப்சி குடித்ததாக மாலை நாளிதழ்களில் செய்தி கொடுக்கலாம்.

10.இதன் சுவையை அறிந்து வேற்றுகிரக வாசிகளின் ராணுவம், தன் எதிரிகளை அழிக்க இதை வாங்கி செல்வதுபோல் ஹாலிவுட் படங்கள் எடுக்கலாம்.

இதெல்லாம் எதுக்கு...இருக்கவே இருக்கு நம்ம வீட்டு மோர்...
எங்க சொல்லுங்க...

உள்ளம் கேட்குமே மோர்...

©மக்கள் நலன் கருதி வெளியிடுபவர்
நாடோடி சரா...

நான் கதை எழுதிய கதை...

எனக்கு ரொம்ப நாளா மனசுல ஒரு அரிப்பு. நாமலும் கதை எழுதுனா என்ன?

இந்த அரிப்பு ரணமாகி போறதுக்குள்ள கதை எழுதலாம் அப்படின்னு ஒரு குயர் A4 பேப்பர் வாங்கி, நல்லா மார்ஜின் போட்டுட்டு யோசிச்சேன்.

என்ன எழுதுறது?????????????????

டேய் சரா... முதல்ல பிள்ளையார் சுழி போடுடான்னு சொன்ன என்னுள் இருந்த ஆன்மீகவாதிக்கு ஒரு சபாஷ் சொன்னேன்.

பிள்ளையார் சுழி போட்டாச்சு...அப்புறம்...எத பத்தி கதை எழுதுறது ?????

முதல் முறையாய் கதை எழுதுற சாமி கதை எழுதுன்னு என் ஆன்மீகவாதி அறிவுறுத்தினான்...

ச்சி... அடங்கு என்று என் பெரியார் (அதாங்க பகுத்தறிவு) கண்டிச்சார் (கொஞ்சம் மரியாதை )

அறிவியல் சம்பந்த பட்ட கதை எழுத என் விஞ்ஞானி வலியுறுத்தினான்.

காதல் கதை எழுத சொல்லி என் ரோமியோ தூண்டினான்.

கடைசியில் என் சுய அறிவு முழிச்சுகிட்டு...

தம்பி... நேரமாச்சு தூங்கு நாளைக்கு ஆபிசு போனும்..இல்லை ஆப்புதான்னு சொல்லி மிரட்டியது...

கடைசியில் எதார்த்தம் வென்று என் கதை பிள்ளையார் சுழியேடு நிற்க்கிறது.

இருந்தாலும் வார கடைசி இருக்குல்லா!!!நாங்க அப்ப வருவோம்ல என்று எல்லாரும் அடங்கினார்.விரைவில் ஒரு கதை எழுதும் அபாயம் இருக்கிறது.

நேசத்தின் சுவாசத்தில்...சரா...

இழந்த சுயம்.

அன்னிய உணவுண்டோம்,
ஆங்கிலேய உடையணிந்தோம்

அம்மாவை மம்மி என்றோம்
சும்மவே ஆங்கிலம் பேசினோம்

கலாச்சரத்தை கற்பழித்தோம்
கடன் வாங்கியாவது கான்வென்டில் சேர்த்தோம்

"தை" மறந்து ஜனவரிக்கு
"கை" குலுக்குகிறோம்.

குடியாண்ட மரபு மறந்து
குழைந்து கும்பிட்டு வாழ்கிறோம்.

காசு தரும் call center வேலையை.
கழுத்தில் டை கட்டிகௌரவமாக பார்கிறோம்

அமெரிக்க காரன் வாங்கிய அல்வா
இனித்ததா இல்லை புளித்ததா என்று
இந்தியாவில் இருந்து கவலை படுகிறோம்...

அன்னியன் போய் ஐம்பது வருடம் தாண்டியும்
அடிமை மோகம் தீர வில்லையே...

நேசத்தின் சுவாசத்தில்...சரா...

இது கதை அல்ல நிஜம்...

ஆனா ஆவன்னாவை ஆங்கிலத்தில் படித்து
இருபத்து ஒரு வயதில் பட்டம் வாங்கி,

எங்க ஊரில் வேலை இல்லை,
எனக்கொரு வேலை கொடு
என்றுஎப்படியாவது ஒரு visa வில்
எங்காவது ஒரு வேலை தேடி

அமெரிக்கனுக்கோ, அரபிக்கோஅடிபணிந்து
ஆயிரம் டாலர்வீட்டுக்கு அனுப்பி

ஊரில்ஒரு பெண்ணைஒரு மாத விடுப்பில்
உடனே திருமணம் செய்து
அவளை ஒரு வருடம்,உடன் இருத்தி
அம்மாவாக ஆக்கிவிட்டு
ஊருக்கு அனுப்பி வைத்து

வருடம் ஒருமுறை வீட்டுக்கு
வருகை பதிவு செய்துவாழும்
அவனை பார்த்துஅவன் குழந்தை கேட்டதாம்....

அம்மா இந்த அங்கிள் யாரு...
டாலருக்கும்,ரியாலுக்கும் நம்மை விற்றுவிட்டு
டாடா சுமோ வாங்கி என்ன பயன்....?

நேசத்தின் சுவாசத்தில்...
சரா...

முன்னுரை.
வணக்கம் நண்பர்களே...
ரொம்ப நாளாக பகிர்ந்து கொள்ளவேண்டிய விசயம் ஒன்று இருக்கிறது.
அது தான் நான் கலந்து கொண்ட "இந்தியா சுற்றும் மோட்டார் சைக்கிள் பயணம்."
(Hormony motorcycle rally)

அது பற்றி வெளியே பேசும்போது, இந்த அனுபத்தை எப்படியாவது எழுதி வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் பிறகு வேகம் வற்றி மறந்து விடும் ( அட யாருப்பா பேனா எடுத்து, பேப்பர் வாங்கி கை வலிக்க எழுதுறது?).
அப்புறம் ஒரு திடீர் ஞான உதயம், இப்படி எழுதி வைக்கலைனா அப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு மறந்து போய்டும், அப்புறம் ஒரு ராஜராஜ சோழன், அசோகர் (!!!!) மாதிரி என் புகழ் வெளியே தெரியா வேண்டாமா?
என் வருங்கால சந்ததியினர் என் பெருமையை தெரிந்து கொள்வது எப்படி??
அதனால, என் மோட்டர் சைக்கிள் பயண அனுபவத்தை எழுத முடிவு செஞ்சேன். (இருக்கவே இருக்கு கணிணி, அது மூலமா தட்டச்சு செய்வது எளிது.)எழுத ஆரம்பித்து விட்டேன். (இதை முழுசா முடிச்சா! நான் பெரிய ஆளுங்கோ!!)

மோட்டார் பயணத்துக்கு தயாரா???

1... 2...3... கிளம்புங்க.......