மழையும் நானும்
என் பயணங்களில் மழை
மழை பெய்யும் ஒவ்வொரு தருணங்களும்,
நமக்கு எதாவது ஒரு நினைவை விட்டுச்செல்லும்.
சுள்ளென்று வெய்யில் அடிக்கும் சவுதியில்
சில நாட்களாக மழை.
இழந்த இந்தியத்தை நினைவுபடுத்திய மழை...
நினைத்து பார்க்கிறேன்,
எனக்கும் மழைக்கும் உள்ள உறவை.
சிறு வயதில்
வீட்டு பூஜையறை ஜன்னலில் உட்கார்ந்து தம்பிகளோடு
கையில் முறுக்குடன் ரசித்த தீபாவளி மழை.
தீபாவளிக்கு வாங்கிய வெடியை
காயவைக்ககூட விடாமல் வம்பிழுக்கும் மழை.
பேருந்தில் பயணிக்கும் போது,
சட்டர் மூடிய பின்னும்
உள்ளே வரும் அடாவடி மழை.
பள்ளி கால வாழ்க்கையில்,
பல முறை விடுமுறை விட வைத்த
" ஹை... ஜாலி..." மழை
டி.வி.எஸ் 50யில்
"மனோரா" போனபோது,
கண்களை கூட திறக்க முடியாமல் பெய்த அடை மழை.
கல்லூரி வாழ்க்கையில்,
மழையில் நனைந்த மல்லிகை போல் கடும்மழையில் கடந்து செல்லும்
கன்னியரை கண்டு களிக்க வைத்த காதல் (...) மழை
தி.நகரில்,
ஊரே ஒதுங்கி இருக்க,
நாங்கள் மட்டும் நனைந்து சென்ற
சென்னை மழை.
இந்தியா முழுக்க சுற்றும் போது.
எங்கள் கூடவே வந்த இந்திய மழை.
சில ஆண்டுகளுக்கு பிறகு
ராஜஸ்த்தான் "ரத்தன் கர்க்"கில் பெய்த
அபூர்வ மழை.
"கோவா"வில் இருந்த போது.
எங்கள் வண்டியை தள்ள துடித்த
காற்றோடு சேர்ந்து அடித்த கன மழை.
இப்படி பல தருணங்களை
பளிச்சென்று பதிய வைத்த மழை.
இன்று வாடகை காரில் வலம் வரும்போது
வாட்டி எடுக்கிறது பிறந்த ஊரை ஞாபக படுத்தி.
இருக்கட்டும். இருக்கட்டும்
இந்த நினைவையும் நினைத்து பார்க்க
இன்னொருநாள் வராமலா போகும்...
-சரா
25-11-06
ரியாத்
எனது புதிய் பதிவான mahaayogi.blogspot.com யிலும் இது பிரசுரித்துள்ளேன்
சரா
2 மறà¯à®®à¯à®´à®¿à®à®³à¯:
ஹலோ
1 2 3...
feed back வருதா...
testing ....
திரு.தருமி.
திரு சிவ பாலன்
திரு அப்துல்லா
மற்றும் அனானிமஸ் எனது நன்றி...
சரா..
Post a Comment
<< à®®à¯à®à®ªà¯à®ªà¯